என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பணத்தை குதறிய எலி
நீங்கள் தேடியது "பணத்தை குதறிய எலி"
அசாம் மாநிலத்தில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.மில் இருந்த ரூ. 12 லட்சம் பணத்தை எலி கொறித்து தள்ளி நாசமாக்கியதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். #MiceDestroyedNotes #TinsukiaATM
தின்சுகியா:
அசாம் மாநிலம் தின் சுகியா மாவட்டம், லாய்புலியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்-ல் கவுகாத்தியை சேர்ந்த நிதி நிறுவனம் கடந்த மே 19-ம் தேதி ரூ. 29 லட்சத்தை வைத்தது. பணம் வைக்கப்பட்ட மறுநாளே ஏடிஎம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயல்படவில்லை. ஏடிஎம் வாயில் மூடப்பட்டு இருந்த நிலையில் அதற்கு பின்னால் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாமல் இருந்து உள்ளது.
ஏடிஎம்மில் இருந்த ரூ. 12,38,000 பணம் எலியால் சிதைக்கப்பட்டுள்ளது என வங்கி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்களால் ரூ. 17 லட்சத்தை மட்டுமே காப்பாற்ற முடிந்தது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஏடிஎம் பழுது அடைந்த உடன் அதனை சரிசெய்யாதது ஏன்? என்று கேள்வி எழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. #MiceDestroyedNotes #TinsukiaATM

ஏடிஎம் செயல்படாதது தொடர்பாக வங்கி நிர்வாகம் புகார் அளித்ததை அடுத்து கடந்த 11-ம் தேதி அதனை சரிசெய்யும் ஊழியர்கள் சென்றார்கள். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது வங்கி ஏடிஎம்மில் இருந்த 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை எலி ஒன்று கடித்து துண்டு துண்டாக்கியிருந்தது. இது தொடர்பாக வங்கி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஏடிஎம்மில் இருந்த ரூ. 12,38,000 பணம் எலியால் சிதைக்கப்பட்டுள்ளது என வங்கி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்களால் ரூ. 17 லட்சத்தை மட்டுமே காப்பாற்ற முடிந்தது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஏடிஎம் பழுது அடைந்த உடன் அதனை சரிசெய்யாதது ஏன்? என்று கேள்வி எழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. #MiceDestroyedNotes #TinsukiaATM
×

X